உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

காரைக்குடி, செப். 24- காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி மற்றும் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குடும்ப நலச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனிதா கிறிஸ்டி , மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரமேஷ், விரைவு நீதிமன்ற நீதிபதி வள்ளி மணவாளன், நீதித்துறை நடுவர் நீதிபதி கார்மேக கண்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி குடும்ப நலச் சட்டங்கள் குறித்து பேசினார். முகாமை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் முருகேசன், உதவி பேராசிரியர்கள் மெரிஜா ரோஸ், அனிதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை