உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

திருப்புத்துார்: திருப்புத்துார் ஸ்ரீ முத்தையா மெமோரியல் கல்லுாரியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் எஸ்.என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் நவனீத கிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் பங்கேற்றனர். மாணவ,மாணவியருக்கு மழை காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடு, அவற்றை எதிர்கொள்ள வேண்டிய வழி முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. பேராசிரியர்கள் சிவராமமூர்த்தி, வைத்தியநாதன், மாணிக்கநாச்சியார், பாண்டிச்செல்வி மற்றும் ஜாய்கிருபா பங்கேற்றனர். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !