விழிப்புணர்வு நிகழ்ச்சி
மானாமதுரை: மானாமதுரை எம்.ஏ.கே.கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் விளையாட்டு துறை சார்பில் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது. உடற்கல்வி இயக்குனர் கேப்டன் வைரவ சுந்தரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி முக்கியத்துவம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் பிரியங்கா ஏற்பாடுகளை செய்திருந்தார்.