வங்கி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் வரவேற்றார்.காரைக்குடி ஐ.ஓ.பி., மண்டல முதுநிலை மேலாளர் சகாரேயர், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா முன்னிலை வகித்தனர். ரிசர்வ் வங்கி முன்னோடி அதிகாரி வம்சிரெட்டி, நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி அருண், கலெக்டர் பி.ஏ.,(வளர்ச்சி) அருண், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: தேசிய வங்கிகளில் கல்வி கடன் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பத்தை உடனுக்குடன் பரிசீலனை செய்து, தாமதமின்றி கடனை வழங்க வங்கி மேலாளர்கள் முன்வரவேண்டும். 2024 ஏப்., முதல் மார்ச் வரை முன்னுரிமை கடன்களை அதிகம் பெற்ற தாலுகாவில் இளையான்குடி முதலில் உள்ளது.அதற்கு அடுத்து சிங்கம்புணரி, திருப்புத்துார், மானாமதுரை போன்ற தாலுகாக்கள் உள்ளன. சிவகங்கை அருகே அண்ணாமலை நகர், திருப்புவனம் கீழடி, சிங்கம்புணரி உட்பட 5 இடங்களில் வங்கி கிளையோ, ஏ.டி.எம்., மையமோ அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும், என்றார்.