ரத்த தான முகாம்
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன்அண்ணாமலைகல்லுாரியில் ரத்த தான கழகம், நாட்டு நலப்பணி திட்டம், என்.சி.சி., ஓய்.ஆர்.சி., மற்றும் தேவகோட்டை அரசு மருத்துவமனை இணைந்து ரத்த சேகரிப்பு முகாம் நடத்தினர். முதல்வர் நாவுக்கரசு துவக்கி வைத்தார். தேவகோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சியாமளா, காரைக்குடி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மணி மாறன், தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 55 மாணவ மாணவியர் ரத்த தானம் செய்தனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.