உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் மறியல்: 132 பேர் கைது 

பஸ் மறியல்: 132 பேர் கைது 

சிவகங்கை: கிராம உதவியாளர், அங்கன்வாடி ஊழியருக்கு காலமுறை சம்பளம், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட 132 பேரை போலீசார் கைது செய்தனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியருக்கு காலமுறை சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேல்நிலை தொட்டி இயக்குவோருக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரண்மனை வாசல் முன் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்.மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநில தணிக்கையாளர் முருகன் மறியலை துவக்கி வைத்தார். அங்கன்வாடி சங்க மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள், மக்கள் நல பணியாளர் சங்க மாநில செயலாளர் சுரேஷ்குமார், மேல்நிலை தொட்டி இயக்குவோர் சங்க மாநில துணை தலைவர் துரைப்பாண்டி என மறியலில் ஈடுபட்ட 114 சத்துணவு ஊழியர்கள் உட்பட 132 பேரை டி.எஸ்.பி., ஞானராஜ், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை