உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாய் குறுக்கே வந்ததால் வியாபாரி பலி

நாய் குறுக்கே வந்ததால் வியாபாரி பலி

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே நாய் குறுக்கே வந்ததால் டூவீலரில் இருந்து விழுந்து வியாபாரி பலியானார்.மணப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது காசிம் மகன் நசீர் 50, மளிகை கடைக்கு சரக்குகளை மொத்தமாக விற்பனை செய்துவருகிறார். ஜூன் 18ம் தேதி வசூலுக்காக டூவீலரில் சென்றபோது, பி.அய்யாபட்டி விலக்கு அருகே நாய் குறுக்கே வந்துள்ளது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ