உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி வகுப்பு துவக்கம்

கல்லுாரி வகுப்பு துவக்கம்

திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கவிழா நடந்தது.முதல்வர் சசிக்குமார் புதிய மாணவர்களை வரவேற்றார். விவேகானந்தா கல்விக்குழும தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமையுரையில் மாணவர்கள் கல்லூரி நாட்களில் பணிகளை உடனுக்குடன் முடிக்கவும், தினசரி உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் பங்கேற்கவும் அறிவுறுத்தினார். பட்டிமன்ற பேச்சாளர் வக்கீல் அருண் வகுப்புகளை துவக்கி வைத்தார்.திருச்சி ஸ்டேட் பாங்க் துணை மேலாளர் பிரியதர்ஷினி சிறப்புரையாற்றினார். விவேகானந்தா அறக்கட்டளை இயக்குநர் ராஜகோபால், உறுப்பினர் சேதுராமாயி சொக்கலிங்கம், ஊராட்சித் தலைவர் ராஜசேகர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை