உள்ளூர் செய்திகள்

கல்லுாரி விழா

திருப்புத்துார் : கும்மங்குடி விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் 18ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.விவேகானந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் குமரேசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.காரைக்குடி ரோட்டரி தாளாளர் சண்முகம் பங்கேற்றார். துணை முதல்வர் சரவணன் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் உருமநாதன், ராஜகோபாலன் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சசிகுமார் வாழ்த்தினார். பேராசிரியர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி