உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சரிந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம்

சரிந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம்

திருப்புத்துார், : திருப்புத்துார் அருகே அப்பாகுடிப்பட்டியில் சரிந்து வரும் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்லல் ஒன்றியம் அப்பாகுடிப்பட்டி கண்மாயில் உள்ள இரு மின்கம்பங்கள் சரியத் துவங்கியுள்ளன. இதனால் மின் விபத்து ஏற்படுமோ என்று அச்சத்தில் கிராமத்தினர் இக்கம்பங்கள் சரிந்து விழாமல் இருக்க மண் மூடைகள், கம்பு மூலம் முட்டு கொடுத்துள்ளனர்.ஒரு கம்பத்தின் மீது மரம் சாய்ந்து இரு மாதங்களாகியுள்ளதாகவும், இது குறித்து புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை இல்லை என்று கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். மின்துறையினர் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை