ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநிலச் செயலாளர் ரபீக் முகமது தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆசிப் முகமது, மாவட்ட செயலாளர் அப்துல் சித்திக், மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் தாவுத் கைசர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கிளை தலைவர் ஹூமாயூன் கபூர் நன்றி கூறினார்.