மேலும் செய்திகள்
தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
08-Jul-2026
காரைக்குடி: காரைக்குடி தலைமை தபால் நிலையம் முன் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. தபால் துறையை தனியாருக்கு விடுவதை கண்டித்தும், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முருகன், ரமேஷ், ஆறுமுகம், தர்மலிங்கம், ராஜகோபால் உட்பட தபால் ஊழியர்கள் பங்கேற்றனர்.
08-Jul-2026