மேலும் செய்திகள்
மானாமதுரையில் இரவில் மின்தடை
24-Apr-2026
தேவகோட்டை:தேவகோட்டையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை வெயிலின் உஷ்ணத்தால் தவித்து வரும் மக்களுக்கு ஏ.சி., மற்றும் மின்விசிறி தான் ஆறுதல் தரும் குளிர்ச்சி. அந்த வகையில் கோடை தாக்கத்தை தவிர்ப்பதற்காக மின்சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேவகோட்டையில் எந்தவித முன்அறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு நடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மே 2 இரவு நகரில் மழை பெய்த போது மின்வெட்ட செய்தனர். பல மணி நேரமாகியும் மின்வினியோகம் நடக்கவில்லை.- அதேபோன்று இரவு 11:00 மணிக்கு ஒத்தக்கடையில் மின்வெட்டு ஏற்பட்டு, மே 3 காலை 7:00 மணி வரை நீடித்தது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில வீடு, ஓட்டல்களில் மின் அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இச்சூழலில் தொடர் மின்வெட்டு காரணமாக சமையல் செய்ய முடியாமல் பெண்கள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்./
24-Apr-2026