உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் நேரத்தில் கருகியது

நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் நேரத்தில் கருகியது

இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட சூராணம், முனைவென்றி, சாலைக்கிராமம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் பருவ மழை காலத்தின் போது பெய்யும் மழையை வைத்து விவசாய பணிகளை விவசாயிகள் செய்து வரும் நிலையில் சோதுகுடி, வல்லக்குளம் நெஞ்சத்துார், காரைக்குளம், சூராணம், சாலைக்கிராமம்குரூப்பிற்குட்பட்ட ஏராளமான கிராமங்களில் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் நேரத்தில் கருகி வருகின்றன.சோதுகுடி விவசாயி பன்னீர் கூறியதாவது: இளையான்குடியில் பெய்யும் மழையை வைத்து விவசாயம் செய்தோம். வடகிழக்கு பருவமழையின் போது நீர்நிலைகளில் தேங்கிய சிறிதளவு தண்ணீரை வைத்து விவசாய பணிகளை ஆரம்பித்தோம். உழவு, விதை நெல், உரம் போடுதல், களை எடுத்தல் போன்ற பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு தற்போது வரை ரூ.30 ஆயிரம் செலவு செய்துள்ளோம். ஆனால் கடந்த சில நாட்களாக நெற்பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் போனதால் நெற்பயிர்கள் பால் பிடித்து கதிர்கள் உருவாகும் நிலையில் கருகி வருகின்றன. இந்த வருடம் நஷ்டம்ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே புள்ளியியல் துறை அதிகாரிகள் தண்ணீர்இல்லாதது குறித்து கணக்கெடுத்துச் சென்றுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் இப்பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ