உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்களை குழப்பும் இ -சேவை இணையதளம்

மக்களை குழப்பும் இ -சேவை இணையதளம்

சிங்கம்புணரி; தமிழக அரசின் பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க இ சேவை இணையதளம் செயல்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை விண்ணப்பித்து பெறலாம்.மாநில முழுவதும் பல்வேறு ஊர்களில் இ சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இ சேவை மையத்திற்கு செல்ல இயலாதவர்கள் அவர்களாகவே விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்று வந்தனர். தற்போது இந்த இணையதளத்தில் மக்கள் சுயமாக விண்ணப்பிக்கும் போது சர்வர் பழுதால் விண்ணப்பிக்க முடியவில்லை. விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.சான்றிதழ்களை டவுன்லோடு செய்யவும் மக்களால் முடியவில்லை. இதனால் விண்ணப்பித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இணையதள போர்டல் வழியாக விண்ணப்பிப்பதற்கு சர்வரின் வேகத்தை அதிகப்படுத்தி, குறைபாடுகளை களைய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி