டூவீலர்கள் மோதி மூதாட்டி பலி
நாச்சியாபுரம் : திருப்புத்துார் அருகே நாச்சியாபுரத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.கல்லல் ஒன்றியம் தட்டட்டியை சேர்ந்த கணேசன் மனைவி ராக்கம்மாள்60. இவர் தனது மருமகள் ஜோதிமணியுடன் நாச்சியாபுரத்திற்கு சென்றுள்ளார். மதியம் 11:30 மணிக்கு தட்டடிக்கு மீண்டும் டூ வீலரில் சென்றுள்ளனர். (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) அப்போது முன்னதாக நாச்சியாபுரம் ஆண்டி மகன் நாச்சியப்பன்50, என்பவர் ஓட்டிச் சென்ற டூ வீலரை ஜோதிமணி முந்த முயன்றபோது டூ வீலரில் மோதியது.இதனால் தடுமாறி ராக்கம்மாள் கீழே விழுந்து இறந்தார். காயமடைந்த ஜோதிமணி திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.