பைக்கில் சென்ற மூதாட்டி பலி
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் 60. சித்தாள் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று உறவினரின் பைக்கில் பின்னால் அமர்ந்து, ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் அருகே சென்றார். வேகத்தடை அருகே பின்னால் வந்த பால் வண்டி பைக்கில் மோதியது. நிலை தடுமாறி விழுந்த மூதாட்டியின் மீது பால் வண்டி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.