உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சங்கராபுரத்தில் இருந்து காரைக்குடியுடன் இணைந்த ஊழியர்கள் சம்பளமின்றி தவிப்பு

சங்கராபுரத்தில் இருந்து காரைக்குடியுடன் இணைந்த ஊழியர்கள் சம்பளமின்றி தவிப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சி, காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் அங்கிருந்து மாநகராட்சியில் இணைந்த ஊழியர்கள் 132 பேருக்கு சம்பளம் வழங்கப்படாததால் சிரமப்படுகின்றனர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த சங்கராபுரம் ஊராட்சி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுஉள்ளது. இங்கு 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.3 கோடி வருமானம் வரக்கூடிய ஊராட்சியாக இருந்தது. இப்பகுதியில் பத்திரப் பதிவு, ஆர்.டி.ஓ., அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. தவிர, நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இங்கு, துாய்மை பணியாளர்கள் 65 பேர், துாய்மை காவலர்கள் 35 பேர், ஊராட்சி தற்காலிக பணியாளர்கள் 5 பேர், உயர்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள் 23, 4 பேர் தெருவிளக்கு பராமரிப்பாளர், ஒரு செயலாளர் என 132 பேருக்கான பணி யிடத்தை காரைக்குடி மாநகராட்சியிடம் ஒப்படைத்து விட்டனர். இணைக்கப்பட்டதில் இருந்தே இவர்களுக்கு மாநகராட்சி தான் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், மார்ச் சம்பளம் ஏப்., 20 தேதியாகியும் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகூறியதாவது: சம்பளத்திற்கான நிதி ஒதுக்கிய நிலையில், தொடர் விடுமுறையால் வங்கி மூலம் சம்பளம் வழங்குவது பாதித்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ