மேலும் செய்திகள்
மானிய விலையில் உரங்கள் விவசாயிகளுக்கு அழைப்பு
20-Sep-2024
இளையான்குடி : கச்சாத்த நல்லுார் கிராமத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வைகை உபவடியில் உழவர் வயல்வெளி பயிற்சி வேளாண்மை துறை துணை இயக்குனர் மதுரைசாமி தலைமையில் நடந்தது.விவசாய ஆலோசகர் ராஜேஷ் விதை நேர்த்தி மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடுகளை எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர் ஆர்த்தி மண்வளம் மற்றும் மண் சேகரிப்பு முறை பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். உதவி இயக்குனர் தங்கபாண்டியன் வேளாண் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தார். பயிற்சியில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
20-Sep-2024