காரைக்குடியில் சேதமான மின்கம்பங்களால் அச்சம்
காரைக்குடி; காரைக்குடியில் சேதமான மின்கம்பம், டிரான்ஸ்பார்மர்களை மாற்றி அமைக்காததால், விபத்து அபாயம் நிலவி வருகிறது.காரைக்குடி மின் செயற்பொறியாளர் அலுவலகத்தின் கீழ்வடக்கு, தெற்கு, ஊரக பகுதி என மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது.இங்கு 90,000 மின் இணைப்புகள் உள்ளன. காரைக்குடி, அரியக்குடி, இலுப்பக்குடி பகுதி ரோட்டோரம் நிற்கும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான மின்கம்பங்களில் மரங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் விபத்து அச்சத்தில் தவிக்கின்றனர்.