உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

 தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திருப்புத்துார்: திருப்புத்துார் ஸ்ரீமுத்தையா நினைவு கல்லுாரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் நவ நீதகிருஷ்ணன், புதுவயல் நிலைய அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தீ தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் விதம் குறித்தும், தீ விபத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வழிமுறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். மேலும் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு முறைகளை மாணவர்கள், பேராசிரியர்களுக்கு விளக்கினர். பேராசிரியர்கள் சிவராமமூர்த்தி, வைத்தியநாதன், மாணிக்க நாச்சியார், பாண்டிச் செல்வி, ஜாய் கிருபா ஆகியோர் தீ விபத்து பரவாமல் தடுப்பது, தீ விபத்து ஏற்படும் முறைகள் குறித்தும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை