உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மறந்துபோன இணைப்பு கால்வாய்

மறந்துபோன இணைப்பு கால்வாய்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அதிகாரிகளால் மறந்து கைவிடப்பட்ட இணைப்பு பாசன கால்வாயை மீண்டும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உருவாகும் உப்பாறு பல்வேறு ஊர்களைக் கடந்து சிங்கம்புணரியில் பாலாற்றுடன் கலந்து செல்கிறது. அணைக்கரைப்பட்டி ஊராட்சி பாரதிநகர் அருகே இந்த உப்பாற்றில் முழுவீரன் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இத்தடுப்பனையில் இருந்து ஒரு பிரிவு கால்வாய் சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் அருகே ஓடி பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் கலக்கிறது. உப்பாற்றில் ஓடிவரும் உபரி நீரை இக்கால்வாயில் திறப்பதன் மூலம் தண்ணீரை பெரியாறு கால்வாயில் விட்டு அப்பகுதி கண்மாய்களுக்கு நிரப்ப முடியும்.இதற்காகவே கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கால்வாய் கட்டப்பட்ட பிறகு அப்படியே கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இக்கால்வாயை குப்பை, கோழிக் கழிவுகளை கொட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். உப்பாற்றில் தண்ணீர் வரும்போது முழுவீரன் தடுப்பணை மூலம் இக்கால்வாயில் தண்ணீர் திறந்தால் பெரியாறு கால்வாய் பாசன பகுதிக்கு உட்பட்ட அனைத்து கன்மாய்களும் பயன்பெற முடியும்.ஆனால் கால்வாயை அதிகாரிகள் மறந்துவிட்ட நிலை ஆகிவிட்டது. இதை முறையாக தூர்வாரி உப்பாற்றில் தண்ணீர் வரும்போது கால்வாயில் திறக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை