மேலும் செய்திகள்
சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாள ை சூரசம்ஹார விழா
31-Oct-2024
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நவ.2ல் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவருக்கு கார்த்திகை, சஷ்டி தினங்களில் அபிேஷகம் நடைபெறும். ஏழு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழா 45 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவ. 2ல் துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு முருகனுக்கு அபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும்.முதல் 5 தினங்களுக்கு மாலையில் அபிேஷக, ஆராதனை நடைபெறும். ஆறாம் நாளான நவ. 7ல் காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷகமும், தீபாராதனையும் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மேல் முருகன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.ஏழாம் நாளான நவ.8 ல் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டினை தேவஸ்தானம், திருமுருகன் திருப்பேரவையினர் செய்கின்றனர்.சிவகங்கை: காரைக்குடி சுப்பிரமணியபுரம் ராமநவமி மகோத்ஸவ சபா மண்டபத்தில் நவ., 2 முதல் 7 ம் தேதி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு கந்தபுராணம், தொடர் சொற்பொழிவை அலர்மேல் முகுந்தன் நிகழ்த்துகிறார். நவ., 7 ம் தேதி மாலை 6:00 மணிக்கு சண்முக அர்ச்சனை நடைபெறும். ஏற்பாடுகளை மகோத்ஸவ கமிட்டியினர் செய்து வருகின்றனர். குன்றக்குடி சண்முக நாத பெருமான் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நடக்க உள்ளது.
31-Oct-2024