மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..
15-Jul-2025
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அளவில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன், காலமுறை ஊதியத்தில் ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கலைச்செல்வி, மாநில செயற்குழு கோபால், மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா, இணை செயலாளர் பயாஸ் அகமது பங்கேற்றனர். திருப்புவனத்தில் வட்டக்கிளை செயலாளர் ஆசைதம்பி, மானாமதுரையில் வட்டக்கிளை செயலாளர் ராஜேஸ்வரன், சிவகங்கையில் வட்டக்கிளை தலைவர் முத்தையா, திருப்புத்துாரில் வட்டக்கிளை செயலாளர் தமிழரசி, சிங்கம்புணரியில் வட்டக்கிளை நிர்வாகி மதிவாணன், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் தனபால், சாக்கோட்டையில் சிவா, தேவகோட்டையில் துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட தணிக்கையாளர் நவநீதகிருஷ்ணன், அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15-Jul-2025