கிராம சபை கூட்டம்
திருப்புவனம் : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு லாடனேந்தலில் கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. திட்ட இயக்குனர் வானதி, ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன், தாசில்தார் ரமேஷ், பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், முத்துகுமார் பங்கேற்றனர். பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.