உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கனமழையால் தொடர் மின்வெட்டு சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள்

கனமழையால் தொடர் மின்வெட்டு சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள்

காரைக்குடி: காரைக்குடி வட்டாரத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் ஊராட்சிகளில் தொடர் மின்வெட்டு நிலவுகிறது. மேலும் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.காரைக்குடி சாக்கோட்டை பகுதிகளில் கனமழையால் கிராமங்களில் தொடர் மின்வெட்டு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பல மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுவதோடு இரவு நேரங்களில் முழுவதுமாக மின்சாரம் இன்றி விவசாயிகளும் பொதுமக்களும் தவித்து வருகின்றனர்.சாக்கோட்டை வட்டாரம் தட்டாகுடி உட்பட பல்வேறு பகுதிகளிலும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் விபத்து அபாயம் நிலவுகிறது. மின்கம்பங்களை உடனடியாக சரி செய்து முறையாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை