உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உயர் கல்வி வழிகாட்டி

உயர் கல்வி வழிகாட்டி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மருத்துவக் கல்லுாரி கலையரங்கத்தில் நடந்தது. துணை முதல்வர் விசாலாட்சி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் ரமேஷ் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் சிங்காரவேலு உயர்கல்வியில் மாணவர்கள் எந்த துறையை தேர்வு செய்து படிக்கலாம். எந்த துறையில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பேசினார். அரசு பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். கலெக்டரின் தனி உதவியாளர் (கல்வி) சந்திரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை