உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கரூர் சம்பவத்தில் சதியென அனுமானமாக கூறக்கூடாது

கரூர் சம்பவத்தில் சதியென அனுமானமாக கூறக்கூடாது

சிவகங்கை:''கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சதி வேலை இருந்ததாக அனுமானமாக கூறக்கூடாது. ஆதாரங்கள் இருந்தால் ஒப்படைக்க வேண்டும்,'' என, சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது: கரூர் துயரம் மிகவும் வேதனை அளிக்கிறது. சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பொறுப்பு உண்டு. கரூர் கூட்டத்திற்கு வந்தவர்கள் ரசிகர்களாகத்தான் உள்ளனர். அவர்கள் தொண்டர்களாக இன்னும் மாறவில்லை. அக்கட்சியில் 2ம் கட்ட 3ம் கட்ட தலைவர்கள் இல்லாததால் கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் நடந்தது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை வந்த பிறகு தான் அதுகுறித்து விமர்சனம் செய்யலாம். அறிக்கை வருவதற்கு முன் யாரிடமும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை கமிஷன் முன் சமர்ப்பிக்கலாம். பா.ஜ., சார்பில் வந்த எம்.பி.,க்கள் உண்மை அறியும் குழு உண்மை அறிவதற்காக வரவில்லை. அரசியல் உள் நோக்கத்திற்காக அனுப்பப்பட்ட குழுவினர் தான். ஏற்கனவே கும்பமேளா நெரிசலில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது பா.ஜ., உண்மை அறியும் குழுவினரை அனுப்பவில்லை. டில்லி ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலில் பயணிகள் உயிழந்த போதும் பா.ஜ., உண்மை அறியும் குழுவினரை அனுப்பவில்லை. ஐ.பி.எல்., போட்டி வெற்றி விழாவின் போது ஏற்பட்ட உயிரிழப்பிற்கும் பா.ஜ., உண்மை அறியும் குழுவினரை அனுப்பவில்லை. பா.ஜ., ஏற்கனவே இச்சம்பவத்திற்கு ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து விட்டனர். எப்படி சி.பி.ஐ., மூலம் ஆந்திராவில் கூட்டணி அமைத்தார்களோ, அதேபோல தமிழகத்தில் ஒரு கட்சியை கூட்டணி அமைக்க நடத்தப்படும் நாடகமாக பார்க்கிறேன். வதந்திகளை கட்டுப்படுத்துவது அவசியம் தான். முதல்வர் நேற்று அறிக்கை அளித்து இருந்தாலும், சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துகளை கட்டுப்படுத்த முடியாது. கரூர் சம்பவத்திற்கு முதல்வர் உடனே சென்றது குறித்து சர்ச்சை தேவையில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை