மானாமதுரை உச்சி மாகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
மானாமதுரை : மானாமதுரை உச்சி மாகாளியம்மன் கோயிலில் இன்று காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இக் கோயிலில் கும்பாபிஷேக பணிக்காக கடந்த சில மாதங்களாக திருப்பணி நடைபெற்றது. பணி நிறைவு பெற்றதால் கும்பாபிஷேக விழாவிற்காக கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டது. நேற்று காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமானது. மாலை 5:30 மணிக்கு நடைபெற்ற முதலாம் கால யாகசாலை பூஜையில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.இன்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் பின்னர் மகா பூர்ணாகுதியும் நடைபெற்று 9:00 மணிக்கு யாக சாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று 9:30 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.தொடர்ந்து உச்சி மாகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை உச்சமாகாளியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் பரம்பரை பூசாரிகள் ராமகிருஷ்ணன் கதிரேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.