சிவகங்கை நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் துப்புரவு பணி, சுகாதாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதில் தொய்வு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் 2 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார்.அவரும் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். அதேபோல் இங்கு மேலாளராக இருந்தவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பணி மாறுதலில் சென்றார். அந்த பணியும் காலியாகதான் உள்ளது.நகராட்சியில் துப்புரவு பணி, சுகாதாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு, பிறப்பு, இறப்பு பதிவு இவை அனைத்தையும் கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள் இல்லாததால் சுகாதார அலுவலரே இந்த பணிகள் அனைத்தையும் மேற்பார்வை செய்ய வேண்டியுள்ளது.அதேபோல் மேலாளர் இல்லாததால் கூடுதலாக கணக்கரே அந்த பணியையும் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. ஞயிற்றுக் கிழமைகளில் வீடுகளில் குப்பைகள் வாங்கப்படுவதில்லை.மஜித் ரோடு, காலேஜ் ரோடுகளில் இரவில் தெருவிளக்குகள் எரிவதில்லை என புகாரும் உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால் நகராட்சி பணிகள் தொய்வு அடைவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஊழியர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.