மேலும் செய்திகள்
ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
23-Nov-2025
திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து பொன்னமராவதி செல்லும் ரோடு அருகில் பெரிய கண்மாய் பகுதியில் பயன்படாமல் கைவிடப்பட்ட ஆழ்துளையினுள் விழுந்த ஆட்டு குட்டியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். திருப்புத்துார் பெரியகண்மாய் கலுங்கு அருகில் பொன்னமராவதி செல்லும் ரோட்டிற்கு அருகில் ஆழ்துளை கிணறுக்காக 8 இன்ச் அளவிலான துளை போடப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. 20 அடி ஆழத்தில் நீர் உள்ளது. அப்பகுதியில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டுக் குட்டி மூடப்படாமல் உள்ள குழியினுள் விழுந்து விட்டது. ஆடு உரிமையாளர் அய்யனார் செல்வம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த் தலைமையில் சென்ற தீயணைப்பு படையினர். குழாயினுள் கேமராவை பயன்படுத்தி பார்வையிட்டனர். பின்னர் டார்ச் மூலம் ஆடு இருக்கும் தூரத்தை கண்டறிந்தனர். தொடர்ந்து கயிற்றில் சுருக்கு மூலம் ஆட்டுக்குட்டியின் கொம்பு, தலையில் மாட்டி துாக்கினர். உயிருடன் மீட்கப்பட்ட ஆட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கை விடப்பட்ட போர்வெல் குழாய்களில் பல விபத்து நடந்தும் அலட்சியமாக கைவிடப்பட்ட, பயன்படாத ஆழ்குழாய் கள் மூடப்படாமல் விடப்படுவது தொடர்கிறது. தற்போது தீயணைப்புத் துறையினர் துளையை கல் மூலம் தற்காலிகமாக மூடினர்.
23-Nov-2025