சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
காரைக்குடி : காரைக்குடியில் அரசு சட்டக் கல்லுாரி மாணவ மாணவிகள் சார்பில்தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெயப்பிரதா தொடங்கி வைத்தார். சிவகங்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் தங்கமணி, சட்டக் கல்லுாரி முதல்வர் உஷா, பேராசிரியர்கள் பணியாளர்கள் வட்ட சட்டப்பணி குழு நிர்வாக அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் கருப்பசாமி வரவேற்றார்.விழிப்புணர்வு வாசகங்களை கூறி மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி சென்றனர்.