உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டவுன் பஸ்களில் தயிருக்கு ‛ லக்கேஜ் கட்டணம்

டவுன் பஸ்களில் தயிருக்கு ‛ லக்கேஜ் கட்டணம்

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை, சின்ன புதுக்கோட்டை கிராம மக்கள் கறவை மாடுகளை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வீடுகளில் தயாரிக்கப்பட்ட தயிரை 70க்கும் மேற்பட்டோர் பாத்திரங்களில் மானாமதுரையிலிருந்து தெ.புதுக்கோட்டை வழியாக பரமக்குடி செல்லும் அரசு டவுன் பஸ்களில் 35 வருடங்களாக கொண்டு சென்று விற்று வருகின்றனர்.கிராம மக்கள் கூறியதாவது: 35 வருடங்களாக மானாமதுரை வழியாக செல்லும் பஸ்களில் லக்கேஜ் இல்லாமல் தயிரை கொண்டு செல்கிறோம். இரண்டு நாட்களாக பஸ்களில் கட்டாயமாக தயிர் பாத்திரங்களுக்கு லக்கேஜ் வாங்க வேண்டுமென்று சொல்கின்றனர். வாங்காவிட்டால் பஸ்சிலிருந்து இறக்கி விடுகின்றனர். நடத்துனர்களிடம் தற்போது ஏன் வாங்குகிறீர்கள் என கேட்டால் அதிகாரிகள் எங்களை வாங்க சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது என்கிறார்கள்.தயிர் விற்று பிழைக்கும் எங்களை போன்றவர்களிடம் கண்டிப்பு காட்டாமல் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்றனர்.சிவகங்கை கிளை மேலாளர் பெலிக்சிடம் கேட்டபோது, 'இனி தயிருக்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என கூறியுள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை