மேலும் செய்திகள்
கார்த்திகை தீபவிழா கோயில்களில் வழிபாடு
14-Dec-2024
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் கார்த்திகை மகா தீபம் கோயில் குளத்தில் ஏற்றப்பட்டது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகானஸ ஆகமப்படி கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. நேற்று மாலை மூலவர் சன்னதியில் தீபாராதனை நடந்து உற்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் புறப்பாடாகி, கோயில் குளமான திருப்பாற்கடல் தீர்த்தமண்டபம் எழுந்தருளினர். பின்னர் குளத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து குளத்தின் வட கிழக்கு மூலையில் சொக்கப்பனை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் சுவாமி தீர்த்த மண்டபத்திலிருந்து கோயிலுக்கு புறப்பாடு நடந்தது.
14-Dec-2024