மானாமதுரை ரோட்டில் கலவை இயந்திரம் அகற்றம்
மானாமதுரை : மானாமதுரை நான்கு வழிச்சாலையில் சீனியப்பா நகர் பஸ் ஸ்டாப் அருகே ஏராளமான கலவை இயந்திரங்கள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் செல்லும் போது விபத்து அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் இதனை உடனடியாக அகற்ற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர். நேற்று தினமலர் நாளிதழில் செய்தியாக வெளியானது.இதனைத் தொடர்ந்து மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., நரேஷ், டிராபிக் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் போலீசார் சீனியப்பா நகர் பஸ் ஸ்டாப் அருகே நிறுத்தப்பட்டிருந்த கலவை இயந்திரங்களை அகற்றினர்.