உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய ஐவர் கால்பந்து: அரியக்குடி பள்ளி சாதனை

தேசிய ஐவர் கால்பந்து: அரியக்குடி பள்ளி சாதனை

காரைக்குடி: குஜராத் மாநிலத்தில் நடந்த தேசிய ஐவர் கால்பந்துபோட்டியில் அரியக்குடி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.இங்கு, 16 வயதிற்கு உட்பட்டோருக்கான ஐவர் கால்பந்துபோட்டி நடந்தது. இதில், குஜராத், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் அரியக்குடி அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் நித்தீஷ், ஞானசபரீஸ், அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.மும்பை, தமிழகத்திற்கு இடையேயான இறுதி போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது. தமிழக அணியின் வெற்றிக்கு சிறப்பாக விளையாடிய அரியக்குடி அரசு பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை