உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு அலுவலகம் மாற்றத்தால் அவதி

தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு அலுவலகம் மாற்றத்தால் அவதி

மானாமதுரை: மானாமதுரையில் செயல்பட்டு வந்த தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு அலுவலகம் சிவகங்கை-க்கு மாற்றப்பட்டதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும் பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் இரு வழிச்சாலையாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலைக்காக மதுரை அருகே உள்ள விரகனுாரில் இருந்து மானாமதுரை அருகே உள்ள எம்.கரிசல்குளம் வரை 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடு வழங்கும் தேசிய நெடுஞ்சாலை 49 நில எடுப்பு அலுவலகம் மானாமதுரையில் 14 வருடங்களாக இயங்கி வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக காரணங்களுக்காக இந்த அலுவலகம் சிவகங்கைக்கு மாற்றப்பட்டது. நில உரிமையாளர்கள் கூறியதாவது: மதுரை, திருப்புவனம்,திருப்பாச்சேத்தி,மானாமதுரை பகுதியில் நிலம் கொடுத்தவர்கள் மானாமதுரையில் இருந்த அலுவலகத்தை எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது.ஆனால் தற்போது சிவகங்கைக்கு அலுவலகம் மாற்றப்பட்டு அது எந்த இடத்தில் செயல்படுகிறது என தெரியாததால் நில உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.சிவகங்கைக்கு செல்ல வேண்டியுள்ளதால் கால விரயமும், பண விரயமும் ஏற்பட்டு வருவதால் மாவட்ட நிர்வாகம் மானாமதுரையிலேயே நில எடுப்பு அலுவலகத்தை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ