உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளி, கல்லுாரி, விடுதிகளை கண்காணிக்க புதிய சாப்ட்வேர்

பள்ளி, கல்லுாரி, விடுதிகளை கண்காணிக்க புதிய சாப்ட்வேர்

காரைக்குடி: தமிழகத்தில் உள்ள பி.சி., எம்.பி.சி., விடுதிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணியை தொடர்ந்து, விடுதிகளை ஒருங்கிணைத்து மாநிலஅளவில் கண்காணிக்க புதிய சாப்ட்வேர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் ஆயிரத்து 351 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும், ரூ.10 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், பள்ளி கல்லூரி விடுதிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி, (பேஸ் அத்தென்டிகேஷன் டிவைஸ் ) முக அங்கீகார கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது.இவ்விரு கருவிகளையும் ஒருங்கிணைத்து அனைத்து விடுதிகளின் செயல்பாட்டை மாநில அளவில் கண்காணிக்கும் வகையில் விடுதிகள் மேலாண்மை தகவல் அமைப்பு எனும் புதிய சாப்ட்வேர் உருவாக்கும் பணி நடந்து வருவதாக பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.விடுதி பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை