உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புத்தாண்டு பேட்டி ....

புத்தாண்டு பேட்டி ....

விலை உயர்வால் பாதிப்பு

கா.சந்திரன், தேவகோட்டை: 2024ம் ஆண்டு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வால் மிகவும் கஷ்டமாகி விட்டது. சாதாரண நடுத்தர ஏழை மக்களை பாதித்துள்ளது. எதிர் வரும் ஆண்டிலாவது அரசு வரியை குறைக்க வேண்டும். 2025 ல் அரசுகள் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். 2024ல் மழை வளம் அதிகளவில் இருந்தது. இதனால் விவசாயம் பாதித்தது. 2024ல் போர், துர்மரணங்கள், அதிகளவில் இருந்தது. வரும் ஆண்டில் போர் மேகங்கள் மறைந்து அமைதி நிலவ வேண்டும். வரி உயர்வில்லாத ஆண்டாக 2025ம் ஆண்டு அமைய வேண்டும்.

2025 போராட்ட ஆண்டாக மாறும்

பா.லதா, மாவட்ட மகளிரணி தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சிவகங்கை: 2024 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி தமிழக அரசு, அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த ஆண்டாக தான் கருதுகிறோம். முதல்வர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி தரவில்லை. 2025 ம் ஆண்டிலும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தர முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த ஆண்டு (2025) அரசு ஊழியர், ஆசிரியருக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் இடையே போராட்டகள ஆண்டாக தான் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி