உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஆக்கிரமித்துள்ள தேவகோட்டை வாரச்சந்தை

 ஆக்கிரமித்துள்ள தேவகோட்டை வாரச்சந்தை

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள வாரச்சந்தை சுகாதார சீர் கேடாக காணப்படுவதுடன் ஆக்கிரமித்து கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. தேவகோட்டை கண்டதேவி ரோட்டில் நகராட்சி வாரச் சந்தை ஞாயிறு தோறும் செயல்படுகிறது.தேவகோட்டை மட்டுமின்றி பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு கடை அமைக்கின்ற னர். சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சந்தைக்கு பொருள் வாங்க வருகின்றனர். ஆயிரத் திற்கும் அதிகமான மக்கள் வந்து செல்லும் இந்த சந்தை வளாகம் சுகாதார சீர் கேடாக காட்சி அளிக்கிறது. சுத்தம் செய்வதில்லை. சந்தைக்குள் கால் வைக்க முடியவில்லை. காய்கறி கழிவு, மீன் கழிவு, கோழி கழிவு அப்படியே கிடக்கின்றன.மேலும் இந்த கழிவுகளை சாப்பிடுவதற்காகவே மாடுகள் நிரந்தரமாக சந்தைக்குள் திரிகின்றன. இதனால் இக்கழிவுகளோடு மாட்டு சாணமும் சேர்ந்து விடுகிறது. இந்த கழிவுகளை அரைகுறையாக சுத்தம் செய்து மறு வாரம் கடைகளை போடுகின்றனர். அனைத்து ஊர்களிலும் வாரச்சந்தையை பொறுத்த வரை அவ்வப்போது இருக்கும் இடத்தில் கடைகளை அமைப்பார்கள். ஆனால் தேவகோட்டை வாரச்சந்தையை பொறுத்த வரை சில வியாபாரிகள் நிரந்தரமாக இடங்களை அடைத்து கடைகள் வைத்து உள்ளனர். தற்போது ஆங்காங்கே நிரந் தரமாக கட்டடங்களையும் கட்டி நிரந்தர ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி அலுவலர்கள் கட்டட பணிகளை கண்டு கொள்ளவில்லை. நுாற்றுக்கும் மேற்பட்டோர் சந்தைக்கு வெளியேயும் ரோட்டில் கடைகளை போடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் வாரச்சந்தையில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. வெளியூர் வியாபாரிகள் தவிக்கின்றனர். வாரச்சந்தையில் மக் களின் அவதியை நீக்கும் நிலையில், வாரச்சந்தை முடிந்தவுடன் தூய்மை பணியாளர்களால் சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி அனுமதி இன்றி நிரந்தரமாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ