அரசு பஸ்களில் ஆன்லைனில் கட்டணம்
தேவகோட்டை: தேவகோட்டையிலிருந்து காரைக்குடிக்குள் செல்லாமல் ஒரு பஸ் இயக்க வேண்டும் இதன் மூலம் பயண நேரம் குறையும் என தினமலர் இதழில் செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகத்தினர் காரைக்குடி செல்லாமல் ரஸ்தாவில் இருந்து மானகிரி வழியாக ஒரு பஸ் இயக்கினர். இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. அதே வழித்தடத்தில் தேவகோட்டையில் இருந்து மானகிரி, திருப்புத்துார், மேலுார் வழியாக மேலும் பஸ்கள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகத்தினர் கூடுதலாக ஒரு பஸ்சை விட்டுள்ளனர்.அனைத்து அரசு பஸ்களிலும் ஜிபே, போன்பே மூலம் ஸ்கேனிங் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் எனவும் போக்குவரத்து கழகத்தினர் அறிவித்துள்ளனர்.