இளையான்குடி பேரூராட்சியுடன் திருவள்ளூரை இணைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
சிவகங்கை: இளையான்குடி பேரூராட்சியுடன், திருவள்ளூர் ஊராட்சி பகுதியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், திருவள்ளூர் ஊராட்சியில் 3,500 பேர் வரை வசிக்கின்றனர். இந்த ஊராட்சியை இளையான்குடி பேரூராட்சியுடன் இணைக்க போவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கிராம மக்கள் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் வந்து மனு அளித்தனர். மேலும் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டால் பெரும்பாலான பெண்கள் பயன்பெற்று வரும் வேலை உறுதி திட்ட பணிகள் தடைபடும் எனக்கூறி, மனு அளித்தனர். தீர்மானம் நிறைவேற்றவில்லை
திருவள்ளூர் ஊராட்சி தலைவர் கே.சாந்தி கூறியதாவது: எங்கள் ஊராட்சியை இளையான்குடி பேரூராட்சியுடன் இணைப்பதற்காக எந்தவித தீர்மானமும் நிறைவேற்றவில்லை. அப்படி இந்த ஊராட்சியை இணைக்கும் திட்டத்திற்கு அனுமதிக்க மாட்டோம். மேலும் பேரூராட்சியிலும் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என தெரிவித்துவிட்டனர் என்றார்.