மேலும் செய்திகள்
பாலியல் தொந்தரவு; உறவினர் கைது
20-Sep-2025
சிவகங்கை: சிவகங்கை அருகே கிராமத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முருகன் 20, என்பவர் மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். கிராமத்தில் வாய் பேசமுடியாத தாய், 13 வயது தம்பியுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசிக்கிறார். கடந்த ஆக., 15 ம் தேதி மதியம் 12:00 மணிக்கு வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது, வீட்டிற்குள் புகுந்த முருகன், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து பல முறை அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதில், அச்சிறுமி 3 மாத கர்ப்பம் அடைந்தார். சிறுமியை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, போக்சோ வழக்கில் முருகன் மீது வழக்கு பதிந்தனர்.
20-Sep-2025