மேலும் செய்திகள்
கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா உற்சாகம்!
13-Jan-2025
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், நெற்குப்பையில் வங்கியாளர், ஏற்றுமதி ஆலோசகர் சேதுராமன் சாத்தப்பனின் 6 தலைமுறைகளை சேர்ந்த 21 குடும்பத்தினர் பாரம்பரிய வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.திருப்புத்துார் அருகே நெற்குப்பையில் ராமநாதன் செட்டியார் 100 ஆண்டுக்கு முன் கட்டிய பாரம்பரிய வீட்டை தற்போதும், ராம.சா.ராம., குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்ப விழாக்களையும் இங்கு கொண்டாடிவருகின்றனர். கடந்த 8 ஆண்டாக பாரம்பரிய வீட்டிற்கு வரும் இக்குடும்பத்தினர் 3 நாட்கள் தங்கி பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர்.பல்வேறு நாடுகள், நகரங்களில் வசிக்கும் 6 வது தலைமுறையில் 21 குடும்பங்களை சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் நெற்குப்பை பாரம்பரிய வீட்டில் ஒன்றுகூடினர்.ஜன., 13 ல் குலதெய்வ வழிபாடு, தெய்வானை அம்மன் படைப்பு வீடு, திருமயம் கோட்டை என இளையதலைமுறைக்கு பாரம்பரியத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.மாலையில் பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்கேற்றனர். நேற்று பொங்கலை முன்னிட்டு சாத்தப்பன் செட்டியாரின் 4 மகன்களின், அய்யாக்கள் வழி தோன்றல்கள் சார்பில் வீட்டு முற்றத்தில் 4 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர்.சங்கு முழங்கி, குலவையிட்டு மகிழ்ந்தனர். மாலையில் பட்டிமன்றம் நடந்தது. ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒரே வண்ணத்தில் வேட்டி, சட்டை, சேலை கட்டிக்கொண்டு பங்கேற்றனர். குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டான தாயம், பல்லாங்குழி, பாண்டி ஆடுதல் போன்றவற்றை கற்பித்தனர். மூத்தவரான சுந்தரம் செட்டியாரிடம் 87, ஆசிர்வாதம் பெற்று, பொங்கல் பரிசு தொகை பெற்றனர். விழா ஏற்பாடுகளை ராஜ்குமார், முத்து செய்தனர்.
13-Jan-2025