உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூக்கள், பூஜை பொருள் விலை உயர்வு

பூக்கள், பூஜை பொருள் விலை உயர்வு

மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடியில் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூ,மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. ரூ.40க்கு விற்கப்பட்ட தேங்காய் ரூ.60க்கும், ரூ.50க்கு விற்கப்பட்ட தேங்காய் ரூ.70க்கும்,வாழைப்பழம் ஒன்று ரூ.5 முதல் ரூ.8க்கும், ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய மாலை ரூ.80க்கும், ரூ.100க்கு விற்ற மாலை ரூ.150 என விற்பனை செய்யப்பட்டது. பூ வியாபாரி கண்ணன் கூறியதாவது: தொடர்ந்து மூன்று நாட்களும் பூஜை நாட்களாக வருவதால் மதுரையில் உள்ள மொத்த பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. இன்று பூ மற்றும் மாலைகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி