மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
05-Apr-2025
சிவகங்கை: வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளி வாசல் முன் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிவாசல் நிர்வாக தலைவர் காஜா முகைதீன், தலைமை இமாம் முகம்மதுபிலால் ஆகியோர் தலைமை வகித்தனர். இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, மசோதாவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளி வாசலில் கருப்பு கொடி ஏற்றி வைத்தனர். * அரண்மனை வாசல் முன் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துபாரதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் காளீஸ்வரன், கண்ணதாசன், செல்வி, தாமரைபாண்டி, ராமு, மகேஸ்வரி, நகர் செயலாளர் கோபாலகிருஷ்ணன்பங்கேற்றனர். * காரைக்குடியில் த.வெ.கா., ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ராமசாமி, துணை செயலாளர் சரஸ்வதி, காரைக்குடி மாநகர் செயலாளர் சொக்கு பங்கேற்றனர்.
05-Apr-2025