புரட்டாசி சனி வார திருவிளக்கு பூஜை
சிவகங்கை : சிவகங்கை சனீஸ்வரர் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சனீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர். விஸ்வகர்மா பொதுநல பூங்கா டிரஸ்ட் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராமசந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.