மலைப்பாம்பு சிக்கியது
சிவகங்கை:மதகுபட்டி அருகேயுள்ள அலவாக்கோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது வீட்டிற்கு அருகே நேற்று மலைப்பாம்பு தென்பட்டது. இதுகுறித்து சொக்கலிங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். சிவகங்கையில் இருந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கிராமத்திற்குள் உலா வந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.