உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் இன்று ரேபிஸ் தடுப்பூசி முகாம்

திருப்புத்துாரில் இன்று ரேபிஸ் தடுப்பூசி முகாம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் அதிகரித்து வரும் தெரு நாய்களுக்கும், வளர்ப்பு நாய்களுக்கும் இன்று தடுப்பு ஊசி போடப்படுகிறது.திருப்புத்துாரில் தெரு நாய்கள அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக தெருக்களில் உலா வரும் இந்த நாய்கள் டூ வீலரில் செல்பவரை விரட்டுகின்றன.சிலநாட்களுக்கு முன் வாணியன் கோயில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு பகுதியில் வெறிநாய் கடித்து சிறுவர், முதியவர் உள்பட 8 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரினர்.இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு மட்டுமின்றி, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று திருப்புத்துார் சீரணி அரங்கில் காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ