உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வட்டார கலை திருவிழா: மங்களம் பள்ளி சாதனை

வட்டார கலை திருவிழா: மங்களம் பள்ளி சாதனை

தேவகோட்டை: கண்ணங்குடி வட்டார வள மையத்தில், அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடந்தது. இதில், 24 தொடக்க, 9 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் மங்களம் நடுநிலை பள்ளி மாணவர்கள் சஷ்டிகாஸ்ரீ, ஹரிபிரத்யூஷ், சேனாதிகா, கீர்த்தனா, மகாஸ்ரீ, ஆரியன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பிரதீஷ், செந்தில்குமார், கபிலன் சாய்நாத் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர். இம்மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் மாலதி, மேற்பார்வையாளர் பாண்டி, தலைமை ஆசிரியை கவிதா, ஆசிரியைகள் ஸ்ரீகலா, கவிதா, பாண்டிச்செல்வி, ராணி, ஷீபா விண்ணரசி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !